பன்னலை கோழிப் பண்ணையில் எரிவாயு வெடிப்பு; 3,000 கோழிகள் தீக்கிரை

பன்னலை பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவத்தினால் கோழிப் பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் சுமார் 3,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 3.00 மணியளவில் பன்னலயிலுள்ள உள்ள கோழிப்பண்ணையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அறிக்கைகளின்படி, கோழிப் பண்ணையில் கோழிகளுக்கு, அடைகாக்கும் வெப்பநிலைக்காக மூன்று எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று வெடித்ததனாலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும், அந்தப் பண்ணையின் கட்டடமும் சேதமடைந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை சேத விபரம் தொடர்பில் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.