பெண் நண்பியை மிரட்ட முனைந்தவர் உயிரிழப்பு

வைப்பக படம்

தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (16) யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 31 வயதுடைய  இளைஞர் ஒருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக  தான் தங்கியிருக்கு அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு  சுருக்கிட்டு கொண்டு தனது பெண் நண்பிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார்.  எனினும் திடீரென கதிரை சரிந்ததால் நிலை தடுமாறிய இளைஞனின் கழுத்தில் கயிறு இறுகியதால் அவரது உயிர் பிரிந்தது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு , சம்பவம் தொடர்பில்  விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின்  திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் முன்னெடுத்துள்ளார்.

(யாழ்.விசேட நிருபர்)

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333