பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் 21வயதான ஹர்னாஸ் சந்து

- 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து பிரபஞ்ச அழகி
- 2ஆம் இடம் பராகுவே; 3ஆம் இடம் தென்னாபிரிக்கா

2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சுஷ்மிதா சென் (1994) மற்றும் லாரா தத்தாவை (2000) தொடர்ந்து இந்தியாவிற்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் 21வயதான ஹர்னாஸ் சந்து-Harnaaz Sandhu-India-Miss Universe

70ஆவது பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நேற்று(12) இஸ்ரேலின் ஈலாட்டில் உள்ள யுனிவர்ஸ் டோமில் நடைபெற்றது. இந்த பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகளும் கலந்து கொண்டனர்.

பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் 21வயதான ஹர்னாஸ் சந்து-Harnaaz Sandhu-India-Miss Universe

இந்தியாவின் சார்பாக, சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து கலந்து கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வாகை சூடியுள்ளார். அவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மகுடம் சூட்டினார்.

இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து 21 வயதான மொடல் ஆவார். ஹர்னாஸ் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளார். இவருக்கு முன், சுஷ்மிதா சென் 1994ம் ஆண்டும் லாரா தத்தா 2000 ஆம் ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் 21வயதான ஹர்னாஸ் சந்து-Harnaaz Sandhu-India-Miss Universe

இந்த செய்தி, மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி 70 ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டியாகும். போட்டியில், பல்வேறு கட்டங்களைத் தாண்டி 80 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் இருந்தனர்.

பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் 21வயதான ஹர்னாஸ் சந்து-Harnaaz Sandhu-India-Miss Universe

இதில் 2ஆம் இடத்தை மிஸ் பராகுவே நதியா ஃபெரீரா மற்றும் 3ஆம் இடத்தை தென்னாபிரிக்காவைச்சேர்ந்த லலேலா மஸ்வானே ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஹர்னாஸ் சந்து
ஹர்னாஸ் சந்து தனது பாடசாலை மற்றும் கல்லூரிப் படிப்பை சண்டிகரின் நகரப் பகுதிகளில் முடித்துள்ளார்.

பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் 21வயதான ஹர்னாஸ் சந்து-Harnaaz Sandhu-India-Miss Universe

அவர் பல்வேறு ஆண்டுகளாக அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார். மேலும், யாரா தியான் பூ பரன் மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மிஸ் சண்டிகர் 2017, மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்தியா 2018 மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 ஆகிய பட்டங்களையும் ஹர்னாஸ் சந்து பெற்றுள்ளார்.