Saturday, December 11, 2021 - 3:34pm
கம்பஹா, திவுலபிட்டிய பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8,000 இற்கும் அதிக கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கின்றது.
இன்று (11) காலை 10.00 மணியளவில் குறித்த பண்ணையில் தீ பரவியதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
கோழிப் பண்ணையில் தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.