விடைபெறும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக பாதுகாப்பு ஆலோசகர்களான கேர்ணல் டேவிட் அஸ்மன் இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரணவை விமானப்படை தலைமை காரியாலயத்தில் நேற்று (08) சந்தித்திருந்தார்.
இச்சந்திப்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பால் கிளைடன்னும் கலந்துகொண்டார்.
இதன்போது இருதரப்பினரும் இடையிலான கலந்துரையாடல் நிறைவு பெற்ற பின் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதோடு புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கு விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இத்தாலி உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு
இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள இத்தாலி உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் பப்ரிஷோ பல்ஸி, இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரணவை விமானப்படை தலைமை காரியாலயத்தில் நேற்று (08) சந்தித்திருந்தார்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையிலான சுமூக கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, இருவரும் நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.