வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட-Admiral Wasantha Karannagoda Appointed as Governor of the North Western Province

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட-Admiral Wasantha Karannagoda Appointed as Governor of the North Western Province

இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது கடற்படைத் தளபதியாக செயற்பட்ட வசந்த கரன்னாகொட, இதற்கு முன்னர் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றினால் மரணமடைந்ததைத் தொடர்ந்து வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட-Admiral Wasantha Karannagoda Appointed as Governor of the North Western Province