சீனாவின் முதலீட்டு திட்டம்: பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

சீனாவின் பல பில்லியன் டொலர் பெறுமதியான பெல்ட் அன்ட் ரோட் திட்டத்தை எதிர்த்து பாகிஸ்தானின் குவாதர் நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இம்ரான் கான் அரசு வளங்களை சீனாவுக்கு வழங்குவதாக உள்ளுர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். துறைமுக நிர்மாணத்திற்கு வளங்களை வழங்குவதில் அடிப்படை நிர்வாகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

பாகிஸ்தானில் சீனாவின் முதலீட்டின் சுரண்டல் பண்பை இது காட்டுவதாக உள்ளது என்று சிங்கப்பூர் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானில் சீனாவின் பல ஆண்டு செயற்பாடு அங்கு உள்நாட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது என்று அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015இன் 46 பில்லியன் டொலர் பெறுமதியான சீன – பாகிஸ்தான் பொருளாதார பதை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.