இ.மி.ச. பொறியியலாளர்களின் சட்டப்படி வேலை போராட்டம் இடைநிறுத்தம்

இ.மி.ச. பொறியியலாளர்களின் சட்டப்படி வேலை போராட்டம் இடைநிறுத்தம்-Work to Rule-Trade Union Action Temporarily Called Off

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் மேற்கொண்டு வந்த சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முற்பககல் 11.30 மணி முதல் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்ததோடு, அதனை சீர் செய்யும் நடவடிக்கை படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு அது தற்போது வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சார சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

இம்மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையின் மறைமுக வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கொழும்பின் பல பகுதிகளுக்கும், அநுராதபுரம், ஹபரணை, லக்ஷபான, அதுருகிரிய, கொத்மலை, பியகம ஆகிய மின் விநியோக கட்டமைப்பு ஊடான மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் மின்சாரத்தை வழமைக்கு  கொண்டுவருவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.