ஒமிக்​ேரான் வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு புதிய தடுப்பூசி அவசியம்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாவனைக்கு வந்து விடும்

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து, புதிய மாறுபாடுகள் மற்றும் பிறழ்வுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளில் டெல்டா மாறுபாடு அனைத்திலும் மிகவும் ஆபத்தானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது புதிய COVID மாறுபாடு Omicron உலகில் கால்பதித்துள்ளது. தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட பி.1.1.529 என்ற இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. தென்னாபிரிக்காவில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால், புதிய மாறுபாடு அதிக பரவும் வீதத்தைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

உலக மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில் இந்த புதிய வைரஸ் பிறழ்வின் பல்வேறு குணங்களைப் பற்றியும், தற்போதுள்ள தடுப்பூசிகளின் முன்னேற்றத்தை அது எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் பற்றியும் விவாதித்துள்ளார்கள். உலக சுகாதார நிறுவனம் ஒமிக்​ேரானை கவலைக்குரிய மாறுபாடாக அறிவித்துள்ளது. வல்லுநர்கள் இந்த விரைவான தாவலை ஒரு கவலையான காரணியாக பார்க்கிறார்கள். கவலையின் மாறுபாடானது 'பரவுதல் அதிகரிப்பு, மிகவும் கடுமையான நோய்' ஆகிய ஆபத்துகளைக் கொண்டுள்ளது.

பெரும்பாலான கொவிட் தடுப்பூசிகள் வைரசின் ஸ்பைக் புரதத்திற்கு எதிராக எதிர்ப்புசக்தியை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டிருப்பதால், ஸ்பைக் புரதத்தில் உள்ள பல பிறழ்வுகள் தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும். புதிய மாறுபாடு தோன்றிய தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது உண்மைதான். ஆனால் ஒமிக்​ேரான் அதிகமாக பரவக் கூடியது என்று கூறுவதற்கு எந்தத் தரவுகளும் கிடைக்கவில்லை என்றாலும், அதன் ஸ்பைக் புரதம் அது பரவும் வீதத்தை அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

தற்போதைய நி​ைலவரப்படி, SARs-COV-2 வைரஸின் மிகவும் ஆபத்தான விகாரமாக டெல்டா மாறுபாடு தொடர்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரான் மாறுபாட்டிற்கும் டெல்டா விகாரத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, தலைவலி மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் மூச்சுத் திணறல், மார்பு வலி போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளை இரண்டும் வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இருப்பினும், WHO இன் கூற்றுப்படி, 'Omicron' உடன் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருக்கலாம் என்று ஆரம்பத் தரவு தெரிவிக்கிறது. அதாவது, இதற்கு முன்பு கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாறுபாட்டின் மூலம் எளிதாக மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம்.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதில் கொவிட் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றுவதால் புதிய மாறுபாடுகள் அது சீராகச் செயல்படுவதை கடினமாக்குகின்றன. புதிய கொவிட் மாறுபாடு ஒமிக்​ேரான் உடல்நலக் கவலையின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது, ஏனெனில் இது ஸ்பைக் புரதத்தில் 30+ பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது கிடைக்கக் கூடிய COVID தடுப்பூசிகளை குறைவான செயல்திறன் கொண்டதாக மாற்றக் கூடும். தடுப்பூசிகள் வைரஸில் இருக்கும் ஸ்பைக் புரோட்டீன்களைப் பொறுத்து உருவாக்கப்பட்டன என்பதைக் கருத்தில் கொண்டு, அதைக் கண்டறிந்து நடுநிலையாக்க, ஸ்பைக் புரதத்தில் உள்ள பல பிறழ்வுகள் தடுப்பூசிகளுக்கு புதிய மாற்றங்களை அடையாளம் காண்பதை கடினமாக்குகின்றன.

புதிய மாறுபாடுகளுக்கு புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். வைரஸ்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால், SARs-COV-2 வைரஸ் வேறுபட்டதல்ல. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் பல கொவிட் வகைகள் உள்ளன. இன்ஃப்ளூயன்ஸா நோய்களைப் போலவே COVID தடுப்பூசிகளையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் ஒமிக்​ேரான் வகை தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தயாராக இருக்கும் என்று மொடர்னா அறிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசிகளைத் தவிர, சுகாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்துகிறார்கள். சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பை விரிவுபடுத்த வேண்டும், கொவிட் பரிசோதனை நிலையங்களை அதிகரிக்க வேண்டும். மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது மற்றும் ஆரோக்கியமான கை சுகாதாரத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.

புதிதாகப் பரவி வரும் வீரியமிக்க ஒமிக்​ேரான் , ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒமிக்​ேரான் வைரஸ் தாக்கியவர்களுக்கு சோர்வு, இலேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வரட்டு இருமல் மற்றும் இலேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் என தென்னாபிரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வைரஸ் தற்போது 17 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். ஒமிக்​ேரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸின் காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன. கனடா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் ஒமிக்​ேரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.