கொழும்பின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொத்மலை உப மின் நிலையத்திலிருந்து பியகம உப மின் நிலையத்திற்கு செல்லும் மின் விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது மின் விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
யுகதனவி அனல் மின்நிலைய ஒப்பந்தம் (New Fortress) தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட 6 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வியாழக்கிழமை (25) நண்பகல் முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினால் தற்போது ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு நிலை சீர் செய்வதில் தாமதம் ஏற்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது.