அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவார்.

புனேவில் இருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் தங்கி வருகிறார். இந்நிலையில், அன்னா ஹசாரேவுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக புனேவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அன்னா ஹசாரேவின் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அன்னா ஹசாரே பூரண குணமடைய வேண்டும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.