அருட்தந்தை சிறில் காமினி 2ஆவது நாளாக CID யில் ஆஜர்

அருட்தந்தை சிறில் காமினி 2ஆவது நாளாக CID யில் ஆஜர்-Reverend-Father-Cyril-Gamini-Fernando Arrived at CID for the 2nd Day

- நேற்று 7 மணி நேர வாக்குமூலம்

வாக்குமூலம் அளிப்பதற்காக, அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

நேற்றையதினமும் (15) CIDயில் முன்னிலையாகியிருந்த அவர், தொடர்ந்து 2ஆவது நாளாக இன்றும் அங்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற ஒன்லைன் மூலமான கலந்துரையாடலில் அருட் தந்தை சிறில் காமினி உள்ளிட்டோர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே CIDயில் பதிவு செய்துள்ள முறைப்பாடு தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ நேற்றையதினம் (15) முற்பகல் CID யில் முன்னிலையாகியிருந்ததோடு, சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின் நேற்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வௌியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.