நவம்பர் 16 - 30 பேண வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு

New-Health-Guidelines-Nov-16-30

- பொதுமக்கள் ஒன்றுகூடல்கள், கூட்டங்கள், விழாக்களுக்கு தடை
- O/L, A/L இற்கு மாத்திரம் பிரத்தியேக வகுப்புகளுக்கு 50% அனுமதி

நாளை நவம்பர் 16 முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையிலான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் பொதுக்கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்களுக்கு மறு அறிவித்தல் வரை அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு மேற்கொள்வதற்கு உரிய அதிகாரத்தை கொண்ட தரப்பிடமிருந்து அனுமதி பெற வேண்டுமெனவும் என புதிய சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்றுமாறு பொதுமக்களை வைத்திய நிபுணர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

முடிந்தவரை குறைந்த வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறும், சமூகத்துடன் தொடர்புபடுவதை தவிர்க்குமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, க.பொ.த. சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) மாணவர்களுக்கு மாத்திரமான பிரத்தியேக வகுப்புகள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொள்ளளவில் 50% பங்கேற்புடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள் வருமாறு...

PDF File: