முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மாநாடும் 'சுட்டு விரல்' வெளியீடும் அடுத்த மாதம்

இலங்கையில் முதலாவது  முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மாநாடும், 'ஸ்ரீலங்கா பென்கிளப்' வெளியீடான  62பெண் கவிஞர்களின் கவிதைகளங்கிய 'சுட்டு விரல்' கவிதைத் தொகுதி வெளியீடும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளதாக 'ஸ்ரீலங்கா பென்கிளப்'  ( SriLanka Pen Club)  ஸ்தாபதத் தலைவி கவிதாயினி மஷூறா ஏ மஜீட் தெரிவித்தார்.

'ஸ்ரீலங்கா பென்கிளப்'  ( SriLanka Pen Club)  என்ற அமைப்பு வெளியிடவிருக்கின்ற 'சுட்டுவிரல்' கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா தொடர்பான முதல் அமர்வு சாய்ந்தமருது அல்ஹிலால் மகாவித்தியாலயத்தில்  நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக உபதலைவியும் அல்ஹிலால் பிரதிஅதிபருமான கவிதாயினி முஜாமலா வரவேற்புரை நிகழ்த்த செயலாளர் கவிதாயினி வானம்பாடி றிப்காஅன்சார் நிகழ்வை நெறிப்படுத்தினார்.

அங்கு ஆலோசனைக்காக அழைக்கப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தௌபீக், உதவிக் கல்விப்பணிப்பாளர்  வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

அங்கு தலைவி மஷூறா மேலும் கூறுகையில் "இம்மாநாட்டிற்கு  இலங்கையின் பல பகுதிகளிலுமிருந்து  Srilanka Pen C lub  உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். கலந்து கொள்ளும் முஸ்லிம் பெண் கவிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதாகவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் சிறப்பாக நடத்தவிருக்கும் இவ்விழாவிற்கு கிழக்கு இளைஞர் அமைப்பு அனுசரணை வழங்குகிறது" என்றார்.

அவர் அந்த மாநாடு தொடர்பாகவும் ,சுட்டுவிரல் தொடர்பாகவும் மேலும் விபரிக்கையில் "உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தவென ஆரம்பிக்கப்பட்டதே 'ஸ்ரீலங்கா பென்கிளப்' என்ற டிஜிடல் அமைப்பு. முஸ்லிம் பெண்களின் படைப்புகளை தொகுத்து வெளியிடுவதும் அடுத்த நோக்கம். அதன் பிரதிபலிப்பாக வரவிருப்பதே 'சுட்டுவிரல்' என்ற கவிதைத் தொகுப்பு நூலாகும்.

தற்போது உலகளாவியரீதியில் 145முஸ்லிம் பெண் ழுத்தாளர்கள் எமது அமைப்பில் உறுப்பினராகவுள்ளனர். முஸ்லிம் பெண் எழுத்தாளர்களது ஆற்றலுக்கான களங்களை வியாபித்துக் கொள்ள வழிகாட்டுவது, கலாசாரத்தினூடாக கலையிலக்கியங்களைக் கட்டியெழுப்புவது, இலைமறை காயாகவிருக்கும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை படைப்புலகிற்கு கொண்டு வருவது, எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் அமைப்பினை வியாபிப்பது, அவசியமான கலையிலக்கிய நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் தேர்ச்சியடையும் பொருட்டு பொருத்தமான வளவாளர்களைக் கொண்டு பயிற்சிப்பட்டறை நடத்துவது, இஸ்லாத்தில் பெண் உரிமை பற்றிய அறிவை அங்கத்தவர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பேற்படுத்துவது, இலக்கியத்திற்கு மேலதிகமாக எதிர்காலத்தில் கவின்கலைகளின் வளர்ச்சிக்கும் உழைப்பது ஆகிய நோக்கங்களைக்கொண்ட நாம் முகநூல் செயலியில் பலவித படைப்புகளை தினமும் படைத்து வருகிறோம். ஆதரவு தாருங்கள்.

உதாரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஞாயிறு கலாட்டா எனும் மகுடத்தின் கீழ் 1.போட்டி_சம்மாந்துறை மஷூறா, 2.ஆக்கங்கள்_ பிர்தௌசியா,  3.முகநூல் வெளியில்_சம்மாந்துறை மஷூறா, 4.பாடிப் பார்க்கலாமா?_ ஷர்ஜிலா ஸப்னா பானு.ஆகியோர் படைக்கிறார்கள்.

திங்கள் கிழமைகளில் பெண் எழுத்தாளர் அறிமுகம், ரோணியோ அறிமுகம், கவிதை எழுதுங்கள்_சிமாயா காதர், சீரியல்_ரபீக்கா பல்கீஸ், சிறுவர் ஆக்கம்_ஹூமதா கப்பார், சமையல் செய்யலாமா? _ரமீஸா மொகிதீன்,நஸீரா ஹஸன்.

செவ்வாய் தினங்களில்  மனம் திறந்து பேசலாம்_முஜாமலா, நாட்டார் இலக்கியம்_ஏரூர் ஜிப்ரியா, அழகியல் அம்சம், ஓவியம், கைப்பணி_ஸூபா , மனம் திறந்து பேசலாம்_யாஸ் ஷாபி, சஞ்சிகை_சாமென் நிஸாம், மருத்துவம்_ ஜலீலா முஸம்மில்,தொழினுட்ப அறிவியல்_சகீனா லைலா அக்ஷயா.

வியாழன் தினங்களில் நெஞ்சோடு நெஞ்சம்_ரமீனா ஐயூப்,,கவிதை பேசுங்கள் வீடியோ-_பர்ஹத் ரியா, ஹம்றா றியால், கவிதை எடிட்டிங்  பேசும் பொற்சித்திரமே_பாத்திமா சம்சுதீன், ராஜிலா ரிஜ்வான், ரம்ஸானா சமீல்,     சப்னா நஸீர், கலக்கலாம் வாங்க_ரமீனா ஐயூப்.

வெள்ளி தினங்களில் பயான் வாராவாரம்_கமர்ஜான் பீவி, பஹ்மியா ஷெரீப், வரலாற்றுப் பெண்மணிகள்_    பௌசுனா இஸ்ஸதீன், இஸ்லாமிய கீதம்_லறீபா பதூர்தீன்.

சனி தினங்களில் புதிய அங்கத்தவர்கள் அறிமுகம், இவ்வாரம் எனக்குப்பிடித்தவை_மர்ழியா சக்காப், படித்ததில் ரசித்தது_மஹீஸா பானு,றிப்கா அன்சார்

இவ்வாறு எமது முகநூல் பக்கத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகள் தொடர்ந்து செல்கின்றன" என்றார்.

(காரைதீவு குறூப் நிருபர்)