பாடசாலைக்குள் புகுந்து அச்சுறுத்தல்; மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் கைது

பாடசாலைக்குள் புகுந்து அச்சுறுத்தல்; மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் கைது-Mederigama Maha Vidyalaya-Mawanella PS Vice Chairman & 2 Other Members Arrested

மாவனல்லை மெதெரிகம வித்தியாலயத்திற்குள் நுழைந்து, அதிபர் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மாவனல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் கே.ஜி. பியதிஸ்ஸ உள்ளிட்ட மூவர் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இவர்களை கைது செய்யுமாறு கோரி அண்மையில் ஆசிரியர் 'அதிபர்கள்' தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாவனல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.