வாழைத்தோட்டம் சுற்றிவளைப்பில் 75kg கஞ்சாவுடன் மூவர் கைது (UPDATE)

வாழைத்தோட்டம் சுற்றிவளைப்பில் 75kg கஞ்சாவுடன் இருவர் கைது-2 Suspect Arrested with 60kg Cannabis-Keselwatta

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் இன்று (07) அதிகாலை 3.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75.565 கி.கி. கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்களும், 3.33 மி.கி. ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்களும், 6.37 மி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது கஞ்சாவுடன் கைதான சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து, போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 790,000 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 18 - 48 வயதுகளுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் கொழும்பு 12, 15 பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நாளையதினம் (08) மருதானை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.