மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவையை பெற தன்னியக்க முற்பதிவு சேவை

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவையை பெற தன்னியக்க முற்பதிவு சேவை-DMT Introduces Automated System for Appointments

நாடு முழுவதிலுமுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளைப் பெற முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தன்னியக்க இணையத்தள (Web) மற்றும் தொலைபேசி (IVR) சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திணைக்களத்தின் சேவைகளைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன்னர், dmtappointments.dmt.gov.lk இணையத்தின் மூலம் முற்பதிவு செய்து மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் (கீழே) வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முற்பதிவுகளை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 29 முதல் இச்சேவையை பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தன்னியக்க முற்பதிவு தொலைபேசி சேவையானது திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான அலுவலக சேவைகளுக்கு மாத்திரம் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், மாவட்ட அலுவலகங்களுக்கும் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சேவை தற்போது நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் தன்னியக்க இணைய மற்றும் தொலைபேசி ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF File: