ராஜா கொல்லுரேவை நீக்கி புதிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரை நியமிக்க தடை

ராஜா கொல்லுரேவை நீக்கி புதிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரை நியமிக்க தடை-Raja Kollure-Sri Lanka Communist Party

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரேவை நீக்கியமை மற்றும் அப்பதவிக்கு மற்றுமொரு தலைவரை நியமிப்பதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதவான் அருண அலுத்கேவினால் இன்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ராஜா கொல்லுரேவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில், கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி கட்சித் தலைமையத்தில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

வடமேல் மாகாண ஆளுநராக செயற்பட்டு வரும் இவர், 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள், அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் இடைநிறுத்தப்படும் என கடந்த தினம் அறிவித்திருந்த நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தான் ஆளுநராக செயற்பட்டதைத் தவிர கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்டதில்லையென வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளதுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டமை கட்சியின் யாப்புக்கு முரணானது என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் அறிவித்திருந்தார்.