பூஜித் - ஹேமசிறிக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை கைவிட கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று (27) விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபர்களுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர். அதற்கமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கைக் கைவிடுமாறு பதில் நீதவான் சஞ்சய கமகே உத்தரவிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்