நாட்டில் 60 வீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி

- நவம்பர் 01 முதல் "பூஸ்டர்" வழங்க தீர்மானம்

நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 வீதமா னோர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸ் (செயலூக்கி) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 70 வீதமானவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர். தற்போது குறைந்தபட்சம் 70 வீத மக்களுக்கு தடுப்பூசி போடுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.