கரியமிலவாயு வெளியேற்றம்: 2050இல் நிறுத்த ஆஸி. முடிவு

அவுஸ்திரேலியா 2050க்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

நீண்ட தாமதத்துக்குப் பின்னர் அது பற்றி அறிவித்த பிரதமர் ஸ்கொட் மொரிசன், திட்டம் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அவுஸ்திரேலியா தொடர்ந்து தொழில்நுட்ப உத்தியைப் பயன்படுத்தும் என்று மொரிசன் குறிப்பிட்டார்.

பசுமை எரிசக்திக்கு மாறும் அதே வேளையில், கரியமிலம் அதிகமாகப் பயன்படுத்தும் தொழில்துறையைப் பாதுகாத்து,

மின்சாரப் பயனீட்டுக் கட்டணத்தைக் குறைக்கத் திட்டமிடப்படுகிறது.

பருவநிலை மாற்றம் தொடர்பில் அவுஸ்திரேலியர்கள் நடவடிக்கை வேண்டுகின்றனர்.

இருப்பினும் வேலை, வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும் அவர்கள் பாதுகாக்க விரும்புவதாகத் மொரிசன் குறிப்பிட்டார். 2030க்குள், வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தை 2005இல் குறிப்பிட்டது போல 28 வீதம் வரை குறைக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவுஸ்திரேலியா மீது நீண்ட காலமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் அதிக மாசு கொண்ட நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலியா உள்ளது. காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்பை நிறுத்துவற்கு 2050 ஆம் ஆண்டுக்குள் உயரும் வெப்பநிலையை 1.5 பாகை செல்சியஸ் ஆகக் கட்டுப்படுத்த நாடுகள் உறுதியளித்துள்ளன.