தனியார் பாமஸியில் அரசாங்க மருந்துகள்!

வர்த்தகருக்கு 30,000 ரூபா அபராதம்

அரச இலச்சினை பதித்த மருந்து மற்றும் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மருந்து மாதிரிகள் (சாம்ப்பல்) என்பவற்றை பாமஸியில் வைத்திருந்த வர்த்தகருக்கு கண்டி மாவட்ட நீதவான் 30,000 ரூபா அபராதம் விதித்தார்.

அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் இன்சுலினானது, தனியார் பாமஸியில் விற்கப்படுவதாக கண்டி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு கிடைத்த ஒரு முறைப்பாட்டை அடுத்து மேற்கொண்ட தேடுதலின் போதுஇ அளவத்துகொடைப் பொலிஸ் பிரிவில் உள்ள பாமஸி ஒன்றில் நேற்று முன்தினம் (25) மேற்படி மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் அரச முத்திரை பதித்த 'சல்பிட்டமோல் இன்ஹேலர்கள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்தே மேற்படி வர்தகருக்கு எதிராக வழக்குத் தாக்கள் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கண்டி நீதவான் வர்த்தகரை குற்றவாளியாகக் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

எம்.ஏ.அமீனுல்லா