சீன உரக் கப்பல் திருப்பி அனுப்பப்படும்

சீனாவில் இருந்து இயற்கை உரத்தை ஏற்றி வந்த கப்பல் திருப்பி அனுப்பப்படும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனாவில் இருந்து இயற்கை உரத்தை ஏற்றி வந்த கப்பல் மீண்டும் அத்துமீறி நாட்டுக்கு வந்துள்ளதா என வினவப்பட்டது இதற்குப் பதிலளித்த அமைச்சர், நீதிமன்ற உத்தரவின் படி அந்த கப்பலுக்கு இலங்கைக்கு வர முடியாது. அதனை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பசளை நெருக்கடி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட நைட்ரிஜன் திரவ பசளை கூடுதல் விலைக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் ஊழல் உள்ளதா என விசாரணை நடைபெறுகிறது.

தகவல் திரட்டப்பட்டு விரிவாக விசாரணை நடைபெறுகிறது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்