இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக செயற்பட்ட ராஜா கொல்லுரே, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கமைய, ராஜா கொல்லுரே தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தான் ஆளுநராக செயற்பட்டதைத் தவிர வேறு கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்டதில்லையென வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளதுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டமை கட்சியின் யாப்புக்கு முரணானது என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார்.