இலங்கை வானொலியின் முப்பெரும் விழா இன்று

SLBC

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா இன்று (24) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையகம் - 06 இல் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் இடம்பெறும் இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அளகப்பெரும கலந்து கொள்கிறார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் பிரத்தியேகச் செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கரின் வழிகாட்டலில்; பணிப்பாளர் குழுவினருடன் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே மற்றும் தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக நீதி அமைச்சர் எம்.யூ.எம். அலிசப்ரி, கடற்​றொழிலமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர்களான டாக்டர் அக்ரஹார கஸ்ஸபா நாயக்க தேரர், சிவ ஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அஸ்ஸெய்யத் டாக்டர் ஹஸன் மௌலானா அல் - காதிரி, பாதர் சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோரின் பங்களிப்பில் சர்வ மத நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நிகழ்வில் விசேட அதிதிகளாக, பொதுஜன பெரமுன கொழும்பு வடக்கின் இணைப்பாளர் ராஜு பாஸ்கரன், பிரதமரின் மதவிவகாரங்களுக்கான இணைப்பாளர் ஏ. உமா மகேஸ்வரன், ஹஜ் குழுவின் தலைவர் அக்ரம் உவைஸ், முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினர்களான மௌலவி பஸ்லுர் ரஹ்மான், எம். முஸ்லிம் சலாஹுதீன், அப்ஸல் மரிக்கார், முன்னாள் முஸ்லிம் சேவைப்பணிப்பாளரும் முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினருமான எம். இஸட், அஹ்மத் முனவ்வர், முன்னாள் வர்த்தக சேவையின் கட்டுப்பாட்டாளர்; பீ.எச். அப்துல் ஹமீட், முன்னாள் தமிழ் சேவைப் பணிப்பாளர் எஸ். ஜீவரட்ணகுமார், முன்னாள் வர்த்தக சேவைப் பணிப்பாளர் ஆர். சந்திரமோகன் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம். ஸாகிர்)