ஒக்டோபர் 25 முதல் பருவச்சீட்டு கொண்டவர்களுக்கு புகையிரத சேவை

ஒக்டோபர் 25 முதல் பருவச்சீட்டு கொண்டவர்களுக்கு புகையிர சேவை-Train Services Within Western Province Only For Season Ticket Holders

எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் புகையிர பருவச்சீட்டு கொண்டவர்களுக்கு மாத்திரம், மேல் மாகாணத்திற்குள் புகையிரத சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்படுவதைத் தொடர்ந்து நவம்பர் 01 முதல் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளை வழமைக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.