பதின்மூன்றாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் 'Evoke International'

இலங்கையின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தக நாமமான Evoke International Limited (இவோக் இன்டர்நெஷனல் லிமிடெட்) அண்மையில் தனது 13ஆவது வருட நிறைவைக் கொண்டாடியது. தொலைத்தொடர்பு வலையமைப்புகளுக்கு பெறுமதி சேர் சேவைகளை (VAS) வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்தும் இந்நிறுவனம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணைய மென்பொருட்கள், WAP தயாரிப்புகள், IVR மற்றும் குரல் சேவைகள், SMSC, டிஜிட்டல் ஊடக வெளியீடுகள், உள்ளடக்க ஒருங்கிணைப்பு, உள்ளடக்க உற்பத்தி, டிஜிட்டல் தயாரிப்பு வெளியீடுகள் உள்ளிட்ட பல விதமான புதுமையான, தரவு சார்ந்த மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

இலங்கை திரைப்படங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள், வீடியோ பாடல்கள் உள்ளிட்ட அனைத்து வகை அம்சங்ககளையும் எந்தவொரு கட்டணமும் இன்றி அனைவரும் பார்வையிடக் கூடிய வகையில் Evoplay தளம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

50'களில் இருந்து இன்று வரை புகழ்பெற்ற காப்பகவாதியான திஸ்ஸ நாகொடவிதானவின், மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை வெளியிடும் கையடக்கத் தொலைபேசி உரிமைகளை Evoke கொண்டுள்ளது.தேசிய தொடர்பாடல் இணைப்பு வழங்குநரான ஸ்ரீ லங்கா ரெலிகாம் (SLT) மொபிடெல் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பங்குதாரரான Evoke, அதன் நிலையான தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒலிக்கான பின்னணி இசை 'Caller Tune' சேவையை வழங்கி வருகிறது. இலங்கையிலுள்ள நான்கு தொலைபேசி வலையமைப்புகளுடனும், பெறுமதி சேர் சேவைகள் மற்றும் உள்ளடக்க விநியோக கூட்டாளராக Evoke பணியாற்றி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரும் பொழுதுபோக்கு உள்ளடக்க களஞ்சியமான Hungama உடன், 2013 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான பங்காளராக Evoke செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் இலங்கையிலுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலான வெவ்வெறு வகையான 5,000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை மூலம் அணுகுவதற்கு வசதி செய்துள்ளது.