வர்ணத்தை மாற்றி சமையல் எரிவாயு சிலிண்டர் பெற்ற ஆசாமி

வர்ணத்தை மாற்றி சமையல் எரிவாயு சிலிண்டர் பெற்ற ஆசாமி-Gas Cylinder Fraud

மஞ்சள் வர்ண சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நீல வர்ணம் பூசி சமையல் எரிவாயுவை பெற்ற நபர் தொடர்பில் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (19) நெல்லியடி சந்தைப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் இவ்வாறு தனது வெற்று மஞ்சள் சிலிண்டரை வழங்கிவிட்டு நீல சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுச் சென்றுள்ளார்.

பின்னர் மஞ்சள் வர்ணத்தில் உள்ள சிலிண்டருக்கு நீல வர்ணம் பூசி வர்த்தகரை ஏமாற்றியமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள CCTV கெமராக்களை பரிசோதித்துப் பார்த்தபோது இம்மோசடி அம்பலமாகியுள்ளதுடன், குறித்த நபரும் கெமராவில் பதிவாகியிருந்தார். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

(நாகர்கோவில் விஷேட நிருபர்)