எழுமாறாக PCR பரிசோதனைகளை தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம்

எழுமாறாக PCR பரிசோதனைகளை தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம்-Random PCR Test

- PHI சங்கம் தெரிவிப்பு

புதிதாக இனங்காணப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோயாளர்களிடம் நோய் அறிகுறிகள் காணப்படாததால் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் திடீர் பிசிஆர் பரிசோதனைகளை எழுமாறாக மேற்கொள்வது அவசியம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு எழுமாறாக திடீர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உண்மை நிலையை இனங்கண்டு கொள்ளமுடியும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

தற்போது மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான அடிப்படை தொடர்பில் கண்டறிவது அவசியம் என தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அது மோசமான நிலைமையை தோற்றுவிக்கலாம் எனவும் கூறினார். நாட்டில் இன்னும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்களும் உள்ளனர். அதனால் எதிர்காலத்தில் மேலும் நெருக்கடியான நிலை உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்