மாணவர்களுக்கு புதிய எல்லைகளை அடைய உதவும் ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில்

இளம் மாணவர்களுக்கு புதிய எல்லைகளை அடைய உதவும் ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில்-World Literacy Day-Scholarship Programme

கொவிட் தொற்று பலரை மோசமாகப் பாதித்திருந்தாலும், ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆன்லைன் பேச்சுப் போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற 12 பாடசாலை மாணவர்கள் 2021 ஓகஸ்ட் 20 அன்று சாதகமான வகையில் இருப்பது எப்படி மற்றும் சவாலான காலங்களில் கூட தொடர்ந்து கற்றல் மற்றும் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் என்ற தலைப்புகளில் மெய்நிகர் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். ஆரம்ப சுற்றுகளில் பங்கேற்ற 134 மாணவர்களில் 12 பேர் பேருவளை, கொழும்பு, கண்டி, காலி, ரஜவெல்லா, இரத்மலானை, சூரியவெவ, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலிருந்து பங்கேற்றனர்.

உலக எழுத்தறிவு தினம் 2021க்கு முன்னதாக, ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்த மெய்நிகர் பேச்சுப் போட்டியை முன்னெடுத்த ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நோக்கத்திற்கு ஏற்ப பெருந்தொற்றுக்கு மத்தியில், மாணவர்களின் பாராட்டத்தக்க மொழி மற்றும் டிஜிட்டல் திறமைகளை இந்த போட்டி நிரூபித்தது.

“கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் போது எனது அனுபவங்கள்” என்ற பொதுவான தலைப்பில் பேசிய நெலுவாவைச் சேர்ந்த போட்டியின் வெற்றியாளரான லசங்கி அபேசிங்க, “இது சிறந்த அனுபவம்! ஆன்லைன் கல்வியும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் இதற்கு முன்பு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை! வகுப்புகள் நன்றாக இருந்தன, என் படிப்பு நன்றாக சென்றது” என்று கூறினார்

இறுதிப் போட்டியின் நடுவர்களில் ஒருவரான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் செயல்பாட்டுத் தலைவரான கார்மலின் ஜெயசூரியா, “பெருந்தொற்றுநோயால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில், இந்த வாலிப போட்டியாளர்கள் நிரூபித்த மொழித் திறமை, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றால் நாங்கள் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டோம். இந்த திறன்கள் ஒரு ஆன்லைன் போட்டியின் மூலம் வெளிவருவதைக் கண்டறிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, அதற்காக அவர்கள் எங்கள் “இங்கிலீஷ் ஃபார் டீன்ஸ்” எனும் புலைமைப் பரிசில் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஐசிடி கூறு மூலம் நன்கு தயார்படுத்தப்பட்டதாக தெரிகிறது.” என்று கூறினார.;

ஐஎல்டி 2021ன் கருப்பொருள் 'மனித மைய மீட்புக்கான கல்வியறிவு: டிஜிட்டல் பிளவைக் குறைத்தல்' ஜேகேஎஃ இன் மொழி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டிற்கு மிகவும் ஒத்துப்போகிறது மற்றும் தொற்றுநோயின் சூழலுக்கு உள்ளேயும் அதற்கு அப்பாலும் பல பின்தங்கிய இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில் திட்டம், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் கல்வி மையத்தின் கீழ், 2004 முதல் கேட்வே கற்றல் மையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக ஆங்கில மொழி புலமையை மேம்படுத்துதல், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல் மற்றும் சாதாரண தரத்தில் கல்வி கற்க தயாராகும்  மாணவர்களின் மென்மையான திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முதன்மையான முயற்சியாகும். கேட்வே குழுமத்தின் தலைவர் டாக்டர். ஹர்ஷா அலஸ், குழந்தைகளின் மேம்பட்ட சொல்லோட்டத்தைக் குறித்து குறிப்பிட்டார். மேலும் இளம் மாணவர்களை அவர்களின் ஆங்கிலத் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் ஆறு மையப் பகுதிகளில் கல்வி ஒன்றாகும் - ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (ஜே.கே.எச்)  கொழும்பு பங்குச் சந்தையில் இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமானகும். இது 7 வெவ்வேறு தொழில் துறைகளில் உள்ள 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் எல்எம்டி இதழால் கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையின் 'மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்' என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. குளோபல் காம்பாக்ட்டின் பங்கேற்பாளராகவும் இருக்கும் ஜே.கே.எச் தனது சமூக பொறுப்புணர்வு பார்வையை "நாளைக்கு தேசத்தை மேம்படுத்துதல்" என்ற ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் வினையூக்கியாக செயல்படும் 'பிளாஸ்டிக்சைக்கிள்' எனும் சமூக தொழில்முனைவோர் முயற்சி மூலமாகவும் இயக்குகிறது.