ஒரு கோடியே 40 இலட்சம் Pfizer டோஸ்கள் அடுத்த மாதம் நாட்டுக்கு கிடைக்கும்

ஒரு கோடியே 40 இலட்சம் Pfizer டோஸ்கள் அடுத்த மாதம் நாட்டுக்கு கிடைக்கும்-140 Lakhs Pfizer Doses

- மூன்றாவது டோஸாக பயன்படுத்த நடவடிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக ஒரு கோடியே 40 இலட்சம் பைசர் தடுப்பூசி அடுத்தமாதம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக மருந்துப்பொருட்கள் உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த உற்பத்தி நிறுவனத்திற்கு அதுதொடர்பில் ஓடர்களையும் சமர்ப்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு விசேட நிபுணர் குழு பரிந்துரைசெய்துள்ள நிலையில் மேற்படி கொள்வனவு செய்யப்படவுள்ள தடுப்பூசிகள் பூஸ்டர் தடுப்பூசியாக வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்