பருத்தித்துறையில் 50ற்கும் மேற்பட்ட ரௌடிகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம்

பருத்தித்துறையில் 50ற்கும் மேற்பட்ட ரவுடிகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம்Sword Group Attack

யாழ்.பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரௌடிகள் வாள்கள், கம்பிகள் சகிகதம் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 5 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாருடன் படையினரும் களமிறக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் இடம்பெற்ற பகுதியை சேர்ந்த ஒருவரே வன்முறைக்கு காரணம் எனவும், அவரே யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 50ற்கும் மேற்பட்ட ரௌடிகளை வாள்களுடன் இறக்கி பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை பொதுமக்கள் கண்டித்ததே தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.