55 வீதமானோருக்கு முதல் டோஸ் உறுதி

சில மாவட்டங்களில் 80 வீதம்

 

இலங்கையின் சனத்தொகையில் தடுப்பூசி ஏற்ற தகுதியானவர்களில் 55 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் முதல் டோஸ் 80 வீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்திலேயே 82 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் 72 வீதமானவர்களும் மன்னார் மாவட்டத்தில் 67 வீதமானவர்களும் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே குறைந்தளவு மக்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது 28 வீதம் ஆகும்.

அக்டோபர் 16-க்குப் பின்னர் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் நிலைமையை ஆராய்ந்த பின்னர் இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.