5,000 மின்னியலாளருக்கு இவ்வருடம் தேசிய தொழில் தகைமை மற்றும் மின்னியலாளர் அனுமதிப்பத்திரம்

5,000 மின்னியலாளருக்கு இவ்வருடம் தேசிய தொழில் தகைமை மற்றும் மின்னியலாளர் அனுமதிப்பத்திரம்-NVQ-Certificate-for-Electricians-PUCSL

- NVQ 3 சான்றிதழ் இரண்டாம் கட்ட திட்டம் நாளை முதல்
- எதிர்வரும் வருடம் 45,000 பேருக்கு அனுமதிப்பதிரம்

மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை (07) முதல் ஆரம்பமாகிறது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 2000 மின்னியலாளர்கள் NVQ 3 சான்றிதழை பெற்று அனுமதிப்பதிரம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

இம்மாதத்தில் மேலும் சுமார் 1,500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 இனை பெற்றுக் கொடுப்பதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாவதுடன், ஆண்டு நிறைவுக்குள் மேலும் 2,500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 சான்றிதழ் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்  தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

5,000 மின்னியலாளருக்கு இவ்வருடம் தேசிய தொழில் தகைமை மற்றும் மின்னியலாளர் அனுமதிப்பத்திரம்-NVQ-Certificate-for-Electricians-PUCSL

மேலும் அவர் தெளிவுபடுத்துகையில்,

நாட்டில் சுமார் 45,000 மின்னியலாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் 95 வீதமானோருக்கு முறையான தொழில் தகைமைகள் எதுவும் இல்லை. இதனால் அவர்களுக்கு தமதுதொழில்துறையில் முன்னேற்றமடைவது கடினமாகும். அதுமாத்திரமன்றி தரமானமின்னியலாளர்கள் இல்லாமை மின்சார பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். இதேவேளை, மின்னியலாளர் அனுமதிப்பதிரங்களை பெற்றுக்கொள்வதற்கு குறைந்தபட்சம் NVQ-3 தகைமை அவசியமாகும்.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே அனைத்து மின்னியலாளர்களுக்கும் இலவசமாக NVQ-3 இனைபெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுஆரம்பித்துள்ளது. அதற்கமைய அனுபம் வாய்ந்த சகல மின்னியலாளர்களுக்கும் துரிதநடவடிக்கையின் கீழ் எதிர்வரும் ஆண்டுக்குள் இலவசமாக NVQ-3சான்றிதழ்களை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும்.

மின்னியலாளர்களுக்கு NVQ-3 சான்றிதழ்களை பெற்றுக் கொடுக்கும்வேலைத்திட்டத்திற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு, இலங்கை தொழிற்பயிற்சிஅதிகாரசபை மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியநிறுவனங்களுடன் இவ்வாண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய தேசிய தொழில் தகைமை பரீட்சை மற்றும்கற்கைநெறி கட்டணம் ஆகியவற்றை மின்னியலாளர்கள் சார்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்பேற்கும். மின்னியலாளர்களுக்கு நான்கு நாட்களுக்குள் முன்னனுபவ மதிப்பீட்டு முறையின் (Recognition of Prior Learning-RPL based Evaluation) கீழ் NVQ-3 தகைமையைபெற்றுக் கொள்ள முடிவதானது இவ்வேலைத் திட்டத்தின் விசேட அம்சமாகும்.மின்னியலாளர்கள் NVQ-3 சான்றிதழை பெற்றுக் கொண்டதன் பின்னர் மின்னியலாளர்களுக்கான தொழில்உரிமங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார். மின்னியலாளர்கள் அனுமதிப்பதிரம் எதிர்காலத்தில் கட்டாயமாக்கப்பட்டு விதிமுறைகள் விதிக்கப்படும்.

இதுவரை மின்னியலாளர்களுக்கு 4 தரங்களின் கீழ் உயர்வினை பெற்றுக் கொள்ளும் வகையில் தொழில் உரிம முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கைபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைஉள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த அனுமதிப்பதிரம் வழங்கும் முறை திட்டமிடப்பட்டுள்ளது.

அனுமதிப்பதிரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்தபட்ச தகுதி NVQ-3 ஆகும்.நாம் தற்போது அனைத்து மின்னியலாளர்களுக்கும் NVQ-3 சான்றிதழைஇலவசமாக பெற்றுக் கொடுக்கின்றோம். அதனால் அனைத்து மின்னியலாளர்களுக்கும் தொழில்அனுமதிப்பத்திரத்தை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

மின்னியலாளர் தொழில் அனுமதிப்பதிரம் வழங்கும்நடவடிக்கை மாவட்ட மட்டத்தில் இம்மாதம் முதல் ஆரம்பிப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம். மின்னியலாளர்களுக்கு இலவச NVQ-3 சான்றிதழ்பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் Facebook.com/pucsl உத்தியோகப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின்ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். 0764271030என்ற இலக்கத்திற்கு உங்களது பெயர் மற்றும் மாவட்டத்தை WhatsApp ஊடாக அனுப்பி வைப்பதன் மூலம் மின்னியலாளர்கள் இவ்வேலைத்திட்டற்காக பதிவு செய்து கொள்ளமுடியும்.