இந்திய உணவு பொருட்களுக்கு எதிராக பாக். இணையதள பிரசாரம்

இந்திய உணவு பொருட்களுக்கு எதிரான இணையதள பிரசாரத்தை பாகிஸ்தான் கடந்த மாதம் 30ம் திகதி முதல் ஆரம்பித்திருப்பதாக 'டிஸ் இன்போலெப்' செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

உலகின் தலைசிறந்த பாஸ்மதி அரிசியை உற்பத்தி செய்யும் நாடு என்ற பெயரை ஈட்டுவதற்கான தொடர் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாகவும் எனினும் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதியான ஒரு தொகை பாஸ்மதி அதிரி தரமற்றது என நிராகரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து இந்தியாவுக்கு எதிரான பாஸ்மதி போட்டியில் அந்நாடு பின்னடைவை சந்தித்துள்ள நிலையிலேயே இப்பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இந்த செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

இந்திய உணவுகளை எதிர்க்கும் இந்த இணையதள பிரசாரம் இந்திய அரிசிக்கு எதிரானதாக இருக்கவேண்டும் என 'டிஸ் இன்போலெப்" கருதுவதாகத் தெரிகிறது.