உலகை மாற்ற ஒன்றிணைவோம், ரெய்ணியுடன்

உலகை மாற்ற ஒன்றிணைவோம், ரெய்ணியுடன்-Raini-Turning Point Dialogue Series by UN-SDG Action Campaign

ஐக்கிய நாடுகள் சபையின் SDG அதிரடி பிரச்சாரத்தின்  திருப்புமுனை கலந்துரையாடல் (Turning point dialogue) தொடரின் முதல் இசை பதிப்பில் ரெய்னி இடம்பெற்றார்.

செப்டம்பர் 17 அன்று,  கூட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல் ,  துறைகள் மூலம் மாற்றத்திற்கு வழிவகுத்தல் மற்றும் உலகத் தலைவர்களுக்கு உலகளாவிய வாரத்தை நினைவூட்டல்  ஆகிய நோக்கத்திற்காக  #Act4SDG நிகழ்வு தொடங்கப்பட்டது. இலங்கையின் உலகளாவிய மாநாட்டுக் கூட்டாளரான "The Road to Rights"  அமைப்பு உலகளாவிய வாரத்தின் ஒரு பகுதியான #Act4SDG காக  இலங்கையில் ஒரு மில்லியன் செயல்கள் எனும் நிகழ்வை தொடங்கியது.

The Road to Rights என்பது  2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இளைஞர்கள் தலைமையிலான சர்வதேச தன்னார்வ அமைப்பாகும்.  இவ் அமைப்பு SDG செயல் விருது 2018  ஐ வென்றுள்ளது.    தொற்று நோய்க்கு மேலாக மக்கள் பசுமையை நிலைநாட்ட சமூக மற்றும் காலநிலை சீராக்க நடவடிக்கைகளில் ஈடுபட நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதை நிருபித்துள்ளனர். ( Image 01)

"Tree for life /  வாழ்க்கைக்கான மரம்", இலங்கையில் ஒரு மில்லியன் மரங்களை நடுதல் மற்றும், "ஐநா-பிளாஸ்டிக் வாரம்", நாட்டில் பிளாஸ்டிக்  பயன்பாட்டை குறைத்தல்  , "வாழ்க்கையை மாற்றல்" மூலம் தயவு மற்றும் அன்பைப் பரப்ப, மற்றும் "முன்னணி ஹீரோக்கள்," இந்த கொடூரமான தொற்றுநோயின் போது மற்றவர்களின் நலனிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் நிஐ ஹிரோக்களின் கதைகள் ஆகியன இலங்கையின் ஒரு மில்லியன் செயல்களில் அடங்குகிறது.

உலகளாவிய வாரத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட திருப்புமுனை கலந்துரையாடல் தொடரின் முதல் இசை பதிப்பில் பிரபல இலங்கைப் பாடகி, ரெக்கார்டிங் ஆர்டிஸ்ட், நடிகை மற்றும் குரல் பயிற்சியாளரான ரெய்னி சாருகா குணதிலகா இடம்பெற்றிருந்தனர்.   அத்துடன் #Act4SDG இன் goal 06 இல் The Road Rights ஐ   பிரபல தூதுவராகவும், ஐநா பொதுச்சபை வாரத்தில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்ற முதல் இலங்கை இசைக்கலைஞராகவும் உள்ளார். (Image 02)

நிறைவு விழாவில் ரெய்னியை UN SDG செயல் பிரச்சாரத்தின் இயக்குநர் திருமதி மெரினா பொன்டி நேர்காணல் செய்தார், அவருடனும் The Road to Rights நிறுவனர் திரு. அஷான் பெரேராவுடனும் இணைந்து பணியாற்றிய வாய்ப்புக்காக தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.

மெரினாவின் முதல் கேள்விக்கு ரெய்னி  உலகளாவிய வாரத்தில் இலங்கையில் ஒரு மில்லியன் மரங்களை நடவு செய்வதை இலக்காகக் கொண்ட மரம் வளர்ப்பு பிரச்சாரம் அவரை மிகவும் ஊக்கப்படுத்தியது அத்துடன்  இது  நாட்டிற்கு ஒரு அற்புதமான சாதனை மற்றும் உலகிற்கு ஒரு பெரிய விஷயம் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் டிஜிட்டல் தூய்மைப்படுத்துதல் மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்துதல் ஆகியவை அவர் வலுவாக ஆதரிக்கும் இரண்டு திட்டங்கள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். ரெய்னியும் மெரினாவின் மரங்களை நடும் உணர்வுகளுடன் உடன்பட்டிருந்தனர், "மரங்களை நடவு செய்வது ஒரு அழகான செயல், இது எதிர்காலத்துடன் மக்களை மீண்டும் இணைக்கவும் மற்றும் இயற்கையை  பாதுகாக்கவும் உதவுகிறது" (Image 03)

திருப்புமுனை கலந்துரையாடல் தொடரின் முதல் இசை பதிப்பாக அவரது இசை நிகழ்வு அமைந்ததால், இசையின் சக்தியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார், "இசை என்பது ஒரு உலகளாவிய மொழி, மக்களை நம்மால் அடைய முடியாத வழிகளில் இசையால் மக்களைச் சென்றடைய முடியும்."

இதனை ஒரு அழகான உதாரணம் மூலம் இவ்வாறு விளக்கி இருந்தார். இசை நீர் போன்றது எவ்வாறு நீர் பல வடிவங்களுக்கு மாறி அதன் இலக்கை நோக்கி பயணிக்கிறதோ அதே போல் தான் இசையும். இசை பல்வேறு சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நமக்கு கற்பிக்கிறது.  அவரது கருத்துப்படி, இசை முலம் மக்களை ஊக்கப்படுத்தலாம், கதைகள் சொல்லலாம், மக்களுக்கு காட்சி கற்பனைகளைக்  கொடுக்கலாம், மேலும் மக்கள் தங்கள் மனதை நேர்மறையான திசையில் மாற்றக் கற்றுக்கொடுக்கலாம்.

The SDG 6,  இலங்கையின் The Road to Right அமைப்பின் சுத்தமான நீர் மற்றும் சுகாதார பிரிவின் தூதவர் ரெய்னியின் செப்டம்பர் 28 அன்று அற்புதமான இசை நிகழ்ச்சி உடன் #Act4SDGs உலகளாவிய வாரம் நிறைவடைந்தது.  இது உண்மையிலேயே இலங்கைக்கு பெருமையையும் பிரமிப்பையும் தரும் தருணம். அவருடைய சிறப்பான செயல்திறன் ஐநா வலைத்தள தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. (Image 04)

உலகளாவிய வாரத்தின் #Act4SDGsஐ வெற்றிகரமாக செய்ய உதவிய மில்லியன் கணக்கான மக்களுக்கு திருமதி மெரினா பின்னர் நன்றி தெரிவித்தார். அத்துடன் உலகத் தலைவர்களுக்கு மிகத் தெளிவான மற்றும் மதிப்புமிக்க செய்தியை அனுப்பிய அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்: "உண்மையிலேயே விடயங்களை திருப்பியமைக்கவும், ஆக்கத்திறனால் சிறந்த வார்த்தையை உருவாக்கவும், அக்கறையின்மையை செயலாகவும், பயத்தை நம்பிக்கையாகவும், பிரிவை ஒன்றிணைவாக  மாற்றுவதற்கு எப்போதாவது நேரம் அமையும் , அந்த நேரம் இப்போது வந்துவிட்டது.

இறுதியாக ரெய்னி மற்றவர்களின் தேவைக்கும் உலகின் நன்மைக்கும் முன்னுரிமை கொடுக்கும் தலைமுறைக் கொண்ட உலகை உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.