சிகரெட் வரிகளை அதிகரிக்குமாறு 89% ஆனோர் தெரிவிப்பு

சிகரெட் வரிகளை அதிகரிக்குமாறு 89% ஆனோர் தெரிவிப்பு-Alcohol and Drug Information Centre-Cigaratte Tax

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான வரிகளை அதிகரிக்க வேண்டுமென, 89.3% மக்கள் கருதுவதாக, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2022 வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் வரிகளை அதிகரிப்பது தொடர்பாக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய, குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில், 20 வயதிற்கு மேற்பட்ட 3,958 பேர் இந்த ஆய்வில் பங்குபற்றியதாக குறித்த மையம் தெரிவித்துள்ளது,

குறித்த ஊடக அறிக்கை வருமாறு...

PDF File: