கன்று ஈனும் நிலையிலிருந்த பசுவை கொன்று குளத்தில் வீசிய விசமிகள்

கன்று ஈனும் நிலையிலிருந்த பசுவை கொன்று குளத்தில் வீசிய விசமிகள்-Cow Killed & Thrown to a Pond by Unidentified Group-Thavasikulam Vavuniya

கன்று ஈனும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றை கத்தியால் வெட்டிய விசமிகள் அதனை அருகில் உள்ள குளத்தில் எறிந்துள்ளனர்.

வவுனியா, தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,

கன்று ஈனும் நிலையிலிருந்த பசுவை கொன்று குளத்தில் வீசிய விசமிகள்-Cow Killed & Thrown to a Pond by Unidentified Group-Thavasikulam Vavuniya

வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் நல்லின வளர்ப்பு பசு மாடொன்று கடந்த இரு தினங்களாக காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து அதனைத் தேடி வந்த அவர், தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் அது கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளார்.

குறித்த பசுவின் தலை மற்றும் உடல் பகுதிகள் கூரிய ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தது.

கன்று ஈனும் நிலையிலிருந்த பசுவை கொன்று குளத்தில் வீசிய விசமிகள்-Cow Killed & Thrown to a Pond by Unidentified Group-Thavasikulam Vavuniya

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(ஓமந்தை விஷேட நிருபர்)