பொன்னாலையில் STF சுற்றி வளைப்பில் 2 வாள்களுடன் ஒருவர் கைது

பொன்னாலையில் STF சுற்றி வளைப்பில் 2 வாள்களுடன் ஒருவர் கைது-STF Recovered 2 Swords at Ponnalai-Vaddukoddai-A Suspect Arrested

வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் (27) இரண்டு வாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை மேற்கில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டை பொலிசாரும் இணைந்து குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர் .

இதனையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரு வாள்கள் மீட்க்கப்பட்டன.

மேலும் இரண்டு வாள்களையும் கையிருப்பில் வைத்திருந்த குறித்த வீட்டின் உரிமையாளரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படை குறித்த நபரையும் இரண்டு வாள்களையும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(பருத்தித்துறை விசேட நிருபர்)