ரிஷாட் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 7 பேருக்கும் ஒக். 05 வரை வி.மறியல் நீடிப்பு

ரிஷாட் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 7 பேருக்கும் ஒக். 05 வரை வி.மறியல் நீடிப்பு-7-Suspects-Including-Rishad Bathiudeen-Hejaaz Hisbullah-Re-Remanded till September-21

கடந்த 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சினமன் கிராண்ட் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அவ்வழக்கின் 7ஆவது சந்தேகநபரான முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (21) கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் ரிஷாட் பதியுதீன் எம்.பி. கைது செய்யப்பட்டிருந்ததோடு, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மத்ரஸா அதிபர் மொஹமட் சகீல்  உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கும் அதே தினமான ஒக்டோபர் 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.