இலங்கை தேசிய வர்த்தக சபை - ரஷ்ய யூரல் வர்த்தக சபை இடையே ஒத்துழைப்பிற்கு வசதியளிப்பு

இலங்கை தேசிய வர்த்தக சபை - ரஷ்ய யூரல் வர்த்தக சபை இடையே ஒத்துழைப்பிற்கு வசதியளிப்பு-Cooperation Between Sri Lanka-Russia Chamber of Commerce

- மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை

இலங்கை தேசிய வர்த்தக சபையின் தலைவர்களுக்கும், ரஷ்யக் கூட்டமைப்பின் யூரல் வர்த்தக சபைக்குமிடையிலான இணையவழி மெய்நிகர் சந்திப்பு, இலங்கையின் வணிகத் துறைகளுக்கும் ரஷ்யக் கூட்டமைப்பின் யூரல் பிராந்தியத்திற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பின் ஆரம்பத்தைக் குறித்து நிற்கும் வகையில் 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்றது.

இலங்கை தேசிய வர்த்தக சபை - ரஷ்ய யூரல் வர்த்தக சபை இடையே ஒத்துழைப்பிற்கு வசதியளிப்பு-Cooperation Between Sri Lanka-Russia Chamber of Commerce

ஜூலை 2021 இல் யூரல் பிராந்தியத்தின் தலைநகர் மற்றும் ரஷ்யாவின் தொழில்துறைத் தலைநகரான எகடெரின்பர்க்கிற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளரின் (வணிகம்) விஜயத்தைத் தொடர்ந்து இது ஏற்பாடு செய்யப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையேயான நெருங்கிய மற்றும் நட்பு உறவைக் குறிப்பிட்டு உரையைத் தொடங்கிய இலங்கையின் தேசிய வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. நந்திக புத்திபால, தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறைகளிலான ரஷ்யாவின் பரந்த அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய காரணமாகும் எனக் குறிப்பிட்டார். விரிவான விளக்கக்காட்சியில் தேசிய வர்த்தக சபை பற்றிய சில புள்ளிவிவரங்களையும் முக்கிய உண்மைகளையும் அவர் மேலும் பகிர்ந்து கொண்டார்.

இலங்கை தேசிய வர்த்தக சபை - ரஷ்ய யூரல் வர்த்தக சபை இடையே ஒத்துழைப்பிற்கு வசதியளிப்பு-Cooperation Between Sri Lanka-Russia Chamber of Commerce

ஒத்துழைப்பில் தனது விருப்பத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்திய ரஷ்யாவின் யூரல் வர்த்தக சபை மற்றும் தொழில்துறையின் தலைவர் திரு. ஆண்ட்ரி பெசெடின், யூரல் பிராந்தியமானது தொழில்துறை உற்பத்திப் பகுதியில் மட்டுமல்லாது ரஷ்யாவின் சர்வதேச நடவடிக்கைகளிலும் ஒரு முன்னணி பிராந்தியமாகும் எனக் குறிப்பிட்டார்.

இரு சபைகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை நிறுவுவதன் முக்கிய நோக்கமானது, இரு நாடுகளினதும் வணிக உறவுகளை விரிவுபடுத்துவதேயாகும் என இரு சபைகளினதும் தலைவர்கள் பயனுள்ள மற்றும் விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர் ஒப்புக்கொண்டதுடன், அடுத்த கட்டமாக எதிர்காலத்தில் இரு நாடுகளிலிருந்தும் வணிகத் துறைகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஒரு இணையவழி மெய்நிகர் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு இரு தரப்பினரும் முன்மொழிந்தனர். மேலும், இலங்கை மற்றும் ரஷ்ய வணிகங்களின் இரு சபைகளுக்கும் இடையே பலனளிக்கும் ஒத்துழைப்புக்கான பாதையை வகுப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

இலங்கை தேசிய வர்த்தக சபை - ரஷ்ய யூரல் வர்த்தக சபை இடையே ஒத்துழைப்பிற்கு வசதியளிப்பு-Cooperation Between Sri Lanka-Russia Chamber of Commerce

மொஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் யூரல் வர்த்தக சபை 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பங்குதாரர்களைக் கொண்டுள்ளதுடன், யூரல் வர்த்தக சபை ரஷ்யாவின் பழமையான சபைகளில் ஒன்றாகும். இது ரஷ்யாவின் தொழில்துறைப் பகுதியில் இலங்கைக்கு ஒரு திறப்பாக அமைவதுடன், இதில் தொழில்துறை உற்பத்தியின் செறிவானது ரஷ்யக் கூட்டமைப்பின் சராசரியை விட 4.5 மடங்கு அதிகமாவதுடன், 16.5 மில்லியன் மக்கள் தொகையானது இலங்கைப் பொருட்களுக்கான பரந்த சந்தையாகும்.