லங்கா ஹொஸ்பிடல்ஸ் கைக்குண்டு தொடர்பில் உப்புவெளியை சேர்ந்தவர் கைது

லங்கா ஹொஸ்பிடல்ஸ் கைக்குண்டு தொடர்பில் உப்புவெளியை சேர்ந்தவர் கைது-26-Year-Old Arrested Over-Recovery of Grenade in Lanka Hospital

- கொண்டு வரப்பட்டது எதற்காக; விசாரணை தொடர்கிறது

நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா ஹொஸ்பிடல்ஸ் தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை, உப்புவெளியில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இது தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவு (CCD) மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 26 வயதான திருமணமாகாத சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபர் எதற்காக குறித்த கைக்குண்டை கொண்டு வந்தார் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை CCD யினர் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள கழிப்பறையில் நேற்றையதினம் (14) குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து STF யினரிடம் ஒப்படைக்கச் செய்யப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.