நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற ரஷ்ய அமைச்சர் பலி

ஆர்டிக் பகுதியில் அவசரகால பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டபோது 55 வயதுடைய ரஷ்யாவின் அவசரகால அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்சேவ் எதிர்பாரத விபத்தில் உயரிழந்துள்ளார். பாறையின் உச்சியில் ஒரு ஒளிப்பதிவாளர் நீரில் விழுந்த போது அவரைக் காப்பாற்ற முயன்ற நிலையில் அமைச்சர் யெவ்ஜெனி ஜினிச்சேவ்  உயரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு சைபீரியாவில் உள்ள புடோரனா இயற்கை காப்பகத்தில் உள்ள கிடாபோ ஓரன் நீர்வீழ்ச்சியில், நோரில்ஸ்க் நகருக்கு மேற்கே சுமார் 165 கி.மீ (100 மைல்) தொலைவில் இந்த விபத்து நடந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.

ஜினிச்சேவ் 2018 முதல் அவசரகால அமைச்சராக உள்ளார் மற்றும் பல ஆண்டுகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பாதுகாப்பு விபரங்களைத் தெரிந்த முக்கிய நபராகவும் இருந்து வருகிறார்.