சம்பளம் முழுமையாக கிடைக்காது

மந்திரி எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி போடாதா ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாக கிடைக்காது என்று அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மந்திரி கேஷாப் மஹந்தா கூறியதாவது:-

அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அலுவலகங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று முதல் அரசு அலுவலகம், கல்வி மற்றும் வணிக நிறுவனங்களின் வாயிலில் “நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்” என்று சுய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இது போல், தனியார் அலுவலகங்களும் தங்களின் சுய அறிவிப்புடன் கூடிய பேனரை நிறுவ வேண்டும்.

தடுப்பூசி போடவில்லை என்ற காரணத்தால் அலுவலகம் வராத ஊழியர்களின் சம்பளம் முழுமையாக பிடிக்கப்படும். சுய அறிவிப்பில் பொய்யான தகவல் தரும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரிடமும் தங்களின் அதிகார வரம்புக்குள் இருக்கும் அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்கள் மற்றும் சந்தை பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்ட நிலை குறித்து உறுதி செய்யவும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...