ஒரே தடவையில் அதிகூடிய வகையில் 4 மில்லியன் Sinopharm டோஸ்கள் நாளை வந்தடையும்

ஒரே தடவையில் அதிகூடிய வகையில் 4 மில்லியன் Sinopharm டோஸ்கள் நாளை வந்தடையும்-Sri Lanka Will Recieve 4 Million Doses of Sinopharm on Sep 04

நாளையதினம் (04) Sinopharm தடுப்பூசியின் மேலும் 4 மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக, இலங்கையில் உள்ள சீன தூதரகம் உறுதி செய்துள்ளது.

சீன தூதரகம் அதன் உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளதோடு, இலங்கை ஒரே நாளில் பெறும் மிகப்பாரிய தடுப்பூசி டோஸ் தொகை இதுவாகுமென சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் சீனாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெறும் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 

மொத்த Sinopharm தடுப்பூசி டோஸ்கள் - 22 மில்லியன்

இலவசமாக கிடைத்தவை (3 மில்.)

 • மார்ச் 31 - 600,000 (0.6 மில்.)
 • மே 25 - 500,000 (0.5 மில்.)
 • ஜூலை 27 - 1,600,000 (1.6 மில்.)
 • ஓகஸ்ட் 28 - 0.3 மில்லியன்

கொள்வனவு செய்யப்பட்டவை (19 மில்.)

 • ஜூன் 06 - ஒரு மில்லியன்
 • ஜூன் 09 - ஒரு மில்லியன்
 • ஜூலை 02 - ஒரு மில்லியன்
 • ஜூலை 04 - ஒரு மில்லியன்
 • ஜூலை 11 - 2 மில்லியன்
 • ஜூலை 11 - 2 மில்லியன்
 • ஓகஸ்ட் 06 - 2.14 மில்லியன்
 • ஓகஸ்ட் 08 - 1.86 மில்லியன்
 • ஓகஸ்ட் 24 - 1 மில்லியன்
 • ஓகஸ்ட் 28 - 2 மில்லியன்
 • செப்டெ. 04 - 4 மில்லியன் (கிடைக்கவுள்ளது)

நாட்டில் நேற்று (02) வரை வழங்கப்பட்ட தடுப்பூசி விபரங்கள்

PDF File: 

Add new comment

Or log in with...