தென் மாகாண தொற்றாளர்களுக்கும் 1904 இற்கு SMS அனுப்பும் வசதி

தென் மாகாண தொற்றாளர்களுக்கும் 1904 இற்கு SMS அனுப்பும் வசதி-SMS-Process-for-COVID19-Patients-in-Southern-Province-1904

- A <இடைவெளி> வயது <இடைவெளி> தே.அ.அ. <இடைவெளி> முகவரி

கொவிட் தொற்றாளர்கள் தங்களது கொவிட்-19 தொற்று தொடர்பில் அறிவிக்க 1904 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பும் முறையானது, இன்று (02) முதல் தென் மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த முறையானது, தற்போது தென் மாகாணத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொவிட் தொற்றாளர்கள் பின்வரும் பிரச்சினைகள் தொடர்பில் அதன் குறியீட்டை இடுவதன் மூலம் SMS இனை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் நிலைமைகள்:
A-சுவாசிப்பதில் சிக்கல் நிலை
B-காய்ச்சல் நிலை
C-எவ்வித அறிகுறியும் இல்லை

அதற்கமைய, உதாரணமாக: சுவாசிப்பதில் சிக்கல் நிலை கொண்ட தொற்றாளர் ஒருவர், A<இடைவெளி>வயது<இடைவெளி>தே.அ.அ.<இடைவெளி>முகவரி
என குறிப்பிட்டு, 1904 இற்கு SMS அனுப்ப வேண்டும்.

SMS மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால், உரிய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான வைத்தியர் குழாம் அனுப்பி வைக்கப்படும்.

தொற்றாளர்கள் வழங்கும் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு, 247 எனும் இலக்கம் மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டு, நோய் நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக அம்பியூலன்ஸ் வண்டி சேவை உள்ளிட்ட ஏனைய சிகிச்சை வசதிகளும் வழங்கப்படும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களுக்கு, வைத்தியர் குழுவொன்று 1390 எனும் அதற்கான பிரத்தியேக இலக்கத்தின் மூலம், தொலைபேசி அழைப்பின் ஊடாக தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு உரிய சேவை வழங்கப்படுமென,  கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...