சர்வதேச விசாரணையே நீதியை பெற்றுத்தரும்

சர்வதேச விசாரணைகளூடாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்குமென தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இது தொடர்பில் அவர் அறிக்கை யொன்றினூடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விசாரணைகளூடாக, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெறுவதற்கு அனைவரும் முனைப்புக் காட்ட வேண்டுமென சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 30 கீழ் 1 என்ற தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை வழங்கியதாக இலங்கை அரசாங்கம் முன்னதாக கூறினாலும் அதன் பின்னர் அதிலிருந்து பின்வாங்கியதென சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி வருடக் கணக்கில் போராடி வருகின்றார்கள். எனவே, சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் நீதி கிடைக்க முடியும். அதனை பெறுவதற்கு முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


Add new comment

Or log in with...