கொவிட் தொற்றுக்குள்ளான அஜித் ரோஹணவுக்கு சிகிச்சை

கொவிட் தொற்றுக்குள்ளான அஜித் ரோஹணவுக்கு சிகிச்சை-Ajith Rohana Tested Positive for COVID19

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரும் (SSP) முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆயினும் அவரது நிலை மோசமானதாக இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), சட்டத்தரணி நிஹால் தல்துவ கடமையாற்றி வருகின்றார்.


Add new comment

Or log in with...