விடை பெற்றார் மங்கள சமரவீர; பேதமின்றி பலரும் அனுதாபம்

1983ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதற்கு விடை கொடுத்திருந்த மங்கள சமரவீர தனது 65ஆவது வயதில் இன்று (24) காலமானார்.

அவர் கொவிட்-19 தொற்று (12) ஏற்பட்டு, கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மங்கள சமரவீரவின் உடல் கொவிட்-19 சுகாதார வழிகாட்டலுக்கமைய இன்று (24) பிற்பகல் பொரணை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

விடை பெற்றார் மங்கள சமரவீர; பேதமின்றி பலரும் அனுதாபம்-Mangala Samaraweera Last Rituals-Condolence Messages from VIPs

இதேவேளை அவரது மரணம் தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட வெளிநாட்டு அரசியல் மற்றும் அரசியல் சாராத முக்கியஸ்தர்களும் தங்களது அனுதாபத்தை வெளியிட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Add new comment

Or log in with...