'பாஸ்' பெற பொலிஸ் நிலையம் வர வேண்டாம்!

'பாஸ்' பெற பொலிஸ் நிலையம் வர வேண்டாம்!-Do Not Go to Police Station for Curfew Pass

- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு

நடமாடும் வர்த்தகங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை (Pass) பெற பொலிஸ் நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வர்த்தகர்கள், நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெறுவதற்காக வருவதாகவும், நாடளாவிய ரீதியில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இவ்வாறான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தகத்தில் ஈடுபடுவது தொடர்பான குறித்த அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென, நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணிகளுக்கு செல்வோர் தங்களது சேவை அடையாள அட்டை மற்றும் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களை முப்படையினருக்கு காண்பித்து தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமென அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...